எம்.கோபாலகிருஷ்ணன் விழா நிகழ்வு

ஜெ தளத்தில் வெளியான பதிவு September 8, 2023 எம்.கோபாலகிருஷ்ணன் கருத்தரங்க உரைகள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தாவரங்களில் மிக முக்கியப் பயன் கொண்ட, பல சத்துக்கள் நிறைந்த கனிகளை கொண்ட, ஆனால் மக்களால் சரியாக  அறிந்து கொள்ளப்படாத, மிக மிக குறைவாகவும் அரிதாகவும்  பயன்படுத்தப்படுபவை எல்லாம் ‘’underutilized plants ‘’ என்று வகைப்படுத்தப்படுகின்றன. இலங்கைக்குச் சென்றிருந்த போது இங்கு பழரசம் செய்யவும் ஊறுகாய்களாகவும் கலந்த சாதம் செய்யவும், விருந்தினர்கள் வருகையிலும் அதிகம் புழக்கத்தில்  எலுமிச்சம் பழங்கள் இருப்பது போல அங்கு விளாம்பழங்களை உபயோகிப்பதைப் பார்த்தேன். … Continue reading எம்.கோபாலகிருஷ்ணன் விழா நிகழ்வு

அனைவரிலுமுள்ள நஞ்சு- ஜெ அவர்களின் தளத்தில் வெளியான கடிதம்

ஆலம் மின்னூல் வாங்க ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் ஆலம் உங்களின் முந்தைய அனைத்துக் கதைகளையும் போலவே  மனதை பாதித்த மறக்கமுடியாத கதைகளிலொன்றுதான். எனினும் கதை வாசிப்பனுபவம் கதைக்குள் பல கதைகளை பல திருப்பங்களை நானும் எனக்குள் நிகழ்த்திக் கொண்ட வகையில்  மிகப் புதியதாக இருந்தது. நெடுங்காலமாக என்னை  மானசீகமாக தொந்தரவு செய்துகொண்டிருந்த நினைவொன்றிற்கான நல்ல சிகிச்சையாகவும் ஆலம் வாசிப்பு இருந்தது. முதல் அத்தியாயத்தின் முதல் பத்தி இல்லாவிட்டால் இது ஒரு குற்றப்பின்னணி கொண்ட … Continue reading அனைவரிலுமுள்ள நஞ்சு- ஜெ அவர்களின் தளத்தில் வெளியான கடிதம்

சீஸ்

கடந்த மாதம் பிரான்ஸுக்கு தன் மனைவி கமீலாவுடன்  மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் வந்திருந்த இங்கிலாந்து  அரசர் சார்லஸுக்கு பிரத்யேகமாக சிறப்பு உணவுகளை ஃபிரான்ஸின்புகழ்பெற சமையல் கலைஞர்கள்தயாரித்திருந்தனர். சார்லஸுக்கு பிரியமான நீல சிங்கி இறால்,  கோழி இறைச்சியுடன் காளான், பிரான்ஸின்  Comte  சீஸ், பிரிட்டனின் நீல சீஸான Stichelton ஆகியவை மெனுவில் இருந்தன.  Stichelton சீஸ்  உலகின் சிறப்பான ஐந்து சீஸ்களில் ஒன்று. Stilton போன்ற பிற  நீலசீஸ்களைப் போல இவையும்  பெனிசிலியம் பூஞ்சையின் ராக்போர்டி என்னும் சிற்றினத்தைக் … Continue reading சீஸ்

குரு

பப்பா நியூ கினியின் ஒரு தனித்த கிராமமான வெய்சாவை சேர்ந்த 11 வயதான சிறுமி கிகியாவிற்கு திடீரென கால்கள்  ஊன்றி நிற்க முடியாமலாகியது. கைகால் மூட்டுகளில் தாங்க முடியாத வலி உண்டான போது, அவள் சத்தமாக கதறி அழுதுகொண்டும் இடையிடையே பயங்கரமாக சிரித்துக்கொண்டுமிருந்தாள். கிகியா அப்பகுதியின் ஃபோரே (Fore) தொல் குடியை சேர்ந்தவள். 1930 வரை பப்பா நியூ கினியில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதே உலகிற்கு தெரியாமல் இருந்தது. ஆஸ்திரேலியாவின் தங்க வேட்டைக்காரர்கள் அங்கு சென்றபோதுதான் … Continue reading குரு

யா தேவி Springer ல்,

சென்ற வாரம் எங்கள் தாவரவியல் துறையிலிருந்து ஒரு அறிவியல் கட்டுரை பிரபல மருத்துவ அறிவியல்  பதிப்பகமான Elsevier’ன்   சஞ்சிகைகளில் ஒன்றில் வெளியானது. The Promising Epigenetic Regulators for Refractory Epilepsy:An Adventurous Road Ahead Berberis tinctoria என்னும் காட்டுப்புதர்ச்செடியின் உண்ணக்கூடிய கனிகளின் வேதிச்சேர்மங்களில், அச்செடி வளரும் சூழலின் தாக்கங்கள் குறித்தானது அக்கட்டுரை. தேசிய தரச்சான்றிதழ்களின் மதிப்புப்புள்ளிகளே கல்லூரிகளின் எதிர்காலத்தை தற்போது நிர்ணயிப்பதால் இப்படியான தரமான சஞ்சிகைகளில் வெளியாகும் கட்டுரைகள் அத்தியாவசியமாகி இருக்கின்றன.  முக்கியமான சஞ்சிகைகளில் பிரசுரமாகும் இப்படியான கட்டுரைகள் பெரும் கவனம் … Continue reading யா தேவி Springer ல்,

கீரைகளின் அரசி- பரட்டைக்கீரை

நுண்சத்துக்களும் வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிறைந்து, குறைவான கலோரிகளே உள்ள பச்சைக்கீரைகள் நம் ஆரோக்கிய உணவில் மிக முக்கியமான இடம்பெற்றிருப்பவை. கீரைகளை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ளுவது உடற்பருமனை குறைக்கவும், இதயப்பதுகாப்புக்கும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மிகவும் உதவும் உலகின் சத்து நிறைந்த 100 உணவுகளின் பட்டியலில் முதல் பத்தில் இருக்கும் (Kale) கேல் எனப்படும் கீரை தற்போது உலகின் ஆரோக்கிய உணவுக்கான தேடலில் இருப்போரின் புதிய விருப்பக்கீரையாகி விட்டிருக்கிறது. முட்டைகோஸ். காலி ஃப்ளவர், பச்சைபூக்கோசு ஆகியவற்றின் அதே … Continue reading கீரைகளின் அரசி- பரட்டைக்கீரை

 மரியா சிபில்லா!

கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னதான அரிய நீல நிற வைரக்கல்லான  ஹோப் வைரம் உள்ளிட்ட பதினான்கு கோடி பல்துறை சார்ந்த பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்மித்சோனியன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் (Smithsonian National Museum of Natural History) ஒரு மதிய வேளை அது. அறிவியலாளரான சினிச்சி நகஹரா (Shinichi Nakahara) தனது மேசையின் இழுப்பறையை திறந்து அந்த கண்ணாடிப் பெட்டியை கவனமாக எடுத்தார்.1981 லிருந்து  அதனுள் இருந்த பதப்படுத்தப்பட்டிருந்த  பட்டாம் பூச்சியை மீண்டும் கவனமாக ஆராய்ந்தார்.  … Continue reading  மரியா சிபில்லா!

டிகாப்ரியோ மரம்!

மத்திய ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டின் ‘எபோ’ காடுகள் இயற்கை வளம் மிகுந்தவை. மலை யானை, உலகின் மிகப்பெரிய கோலியாத் தவளை மிக அரிய  உலகின் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் Red colobuses குரங்குகள் பல அரிய தாவர வகைகள் என பலவற்றின் வாழிடம் இதுதான். உலகின் மழைப்பொழிவில் எபோ காடுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது . இந்த எபோ காடுகளில் 1500 சதுர கிமீ அளவுக்கு மழைக்காடுகள் எபோ ஆற்றின் அருகில் இருக்கிறது.இங்கு 65 மிக முக்கிய … Continue reading டிகாப்ரியோ மரம்!