ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு

அறிவியல் ஆய்வுகளின் முன்னோடி என்று கருதப்படும் வில்லியம் டேம்ப்பியர். (William Dampier) 17/18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். இளம் வயதில் பெற்றொரை இழந்த இவர் 16  வயதிலிருந்தே  கடல் சாகசப் பயணங்களை மேற்கொண்டவர். அவகேடோ, பார்பிக்யூ, பிரெட் ஃப்ரூட் கட்டமரான், சாப்ஸ்டிக்ஸ் (Avocado, Barbecue, Breadfruit, Cashew, Catamaran, Chopsticks ) போன்ற பல நூறு சொற்களை உலகிற்கு தனது கடற்பயண நூல்களில் முதன் முதலில் எழுதி அறிமுகப்படுத்திய இவர் ஒரு கடற்படை தலைவர், மாலுமி, இயற்கையாளர் … Continue reading ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு

நீலக்கற்றாழையும் டெக்கீலாவும்

மெக்ஸிகோவின் ஹாலிஸ்கோ (Jalisco) மலைப் பிரதேசமொன்றில், அட்டோடோனில்கோ நகரில், மிக வறிய  குடும்பமொன்றின் தலைவர் திடீரென  இறந்தபோது அன்னையையும் ஏழு சகோதர சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பைக் குடும்பத்தின் மூன்றாவது மகனாக இருந்தாலும் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருந்த 15 வயதான  ஹூலியோ ஏற்றுக்கொண்டான். (ஹூலியோ கொன்ஸாலெஸ் ஃப்ரௌஸ்டோ எஸ்ட்ராடா- Julio González-Frausto Estrada)1 தனது மாமாவின் கற்றாழை வயல்களிலும், வைன் திரவத்தைப் பழமையாக்கும் நிலவறைகளிலும் மிகக் கடுமையாக வேலைசெய்து ஹூலியோ பெற்ற  வாரச் சம்பளமான ஒன்பது பேஸோக்கள் எட்டு நபர்களடங்கிய அவரது … Continue reading நீலக்கற்றாழையும் டெக்கீலாவும்

அகார் அகார்

 “கொஞ்சம் வேகவைத்த உருளைக்கிழங்கு, மாவு, ஜெலட்டின், மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு இவற்றுடன்’’……….  ஏதோ புதிய உணவுக்கான செய்முறை குறிப்பு போல தோன்றும் இந்த பட்டியல் நுண்ணுயிரியல் துறை உருவான துவக்க காலத்தில் நுண்ணுயிரிகளை வளர்க்க தேவைப்பட்ட திட வளர்ப்பு ஊடகத்திற்கான சோதனை முயற்சிகளில் பயன்படுத்த பட்டவைகள்.  ஆண்டன் வான் லேவன்ஹோக் 17ம் நூற்றாண்டில் நுண்ணோக்கியை கண்டறிந்த பின்னர் நுண்ணுயிரியல் என்னும் துறை உருவாகியது.1880 லிருந்து 1990 க்குள்ளான காலகட்டத்தில்தான் நுண்ணுயிரியல் துறையில் முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து அக்காலம் … Continue reading அகார் அகார்

ஒளிமாசு

சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுபுரம் குழுமம் நண்பர் சக்திவேல் என்னிடம் தாவரவியல் தொடர்பான ஒரு சந்தேகத்தை கேட்டார். 18 வருடங்கள் ஆகிவிட்டன நான் தாவரவியல் கற்பிக்கத் துவங்கி. திறமையான மாணவர்கள், தங்கப்பதக்கம் வாங்கியவர்கள், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றவர்கள் என்று பலர் இருந்திருக்கிறார்கள், இப்போதும் இருக்கிறார்கள், எனினும் இந்த சந்தேகத்தை ஒருவர் கூடக் கேட்டதில்லை. பிற துறைகளை காட்டிலும் தாவரவியல் துறையில் இயற்கையோடு நெருக்கமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் எனினும் தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதையும் அவைகளையும் … Continue reading ஒளிமாசு

வெண்முரசின் சோமம்

ஆயவாஸ்கா தயாரிப்பு பழங்குடியினத்தவர்கள் தாவரங்களுடன் கொண்டிருக்கும் நெருக்கமான தொடர்பு குறித்தான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறேன். குறிப்பாக அவர்கள் சமயச் சடங்குகளில் பயன்படுத்தும் போதைப் பண்புகள்  கொண்ட  தாவரங்கள் குறித்து அறிய ஆர்வம் கொண்டிருக்கிறேன்.  இவை குறித்த ஆய்வுகளை கல்லூரியில் மாணவர்களுக்கு அளிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் நான்  தனிப்பட்ட முறையில் தரவுகளை சேகரித்து கட்டுரைகள் எழுதுகிறேன். எந்த பழங்குடியினப் பகுதிகளுக்கு சென்றாலும் இந்த தாவரங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பதில் ஆர்வமுடன் இருப்பேன்.   கோவை கவிதை முகாமில் கலந்து கொள்ளும் முந்தைய நாள் தருணுடன் … Continue reading வெண்முரசின் சோமம்

நமது கட்சியரசியல்,நமது அறம்

November 22, 2022 அன்று ஜெ தளத்தில் வெளியான கடிதம் லோகமாதேவி மயிலாடுதுறை பிரபு – ஒரு போராட்டம் ஜெயமோகன் அவர்களுக்கு மயிலாடுதுறை பிரபுவின் போராட்டம் குறித்து வாசித்து அதிர்ந்து போனேன். இப்படியான விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மரங்களை பார்த்தாலே அவற்றை வெட்ட வேண்டும் என்று தோன்றும் இந்த தாவரகுருட்டை, இதிலும்  சுயநலமாக தங்களது செல்வாக்கை செலுத்தி பிறரை துன்புறுத்தும் மனிதர்களை நினைக்கையில் துக்கமாக இருக்கிறது பிரபுவின் சூழல் சார்ந்த பல முன்னெடுப்புக்களை அறிவேன். இப்படி இடைஞ்சல்களும் அச்சுறுத்தல்களும் இருக்கையில் எப்படி … Continue reading நமது கட்சியரசியல்,நமது அறம்

பனிமான்கள்.

ஜெ அவர்களின் தளத்தில் வெளியான பதிவு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் பனி நிலங்களில் உங்கள் குடும்பத்து பயண அனுபவங்கள் வாசிக்க வெகு சுவாரஸ்யமாக இருந்தன.  பொதுவாக உங்கள் பயண அனுபவக்கட்டுரைகள் அப்படி நானும் செல்ல வேண்டும் என்னும் ஆசையையும்,  சென்றிருக்காத ஏக்கத்தையும், சமயங்களில் கொஞ்சம் பொறாமையையும் உண்டாக்கும் குறிப்பாக மழை பயண அனுபவங்கள் கடும் பொறாமையை உண்டாக்கின.. ஆனால் இந்த பனி நிலப்பயண அனுபவங்கள் ‘’நல்ல வேளை நான் இங்கெல்லாம் எப்படியும் போகப் போவதில்லை’’என்னும் ஆசுவாசத்தை … Continue reading பனிமான்கள்.

கடவுள் பிசாசு நிலம்

கடவுள் பிசாசு நிலம் வாங்க 2022 விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் ஒன்றில்தான்  முதன்முதலில் அகர முதல்வனை கண்டேன். அதற்கு  முன்பு அவரைச் சந்தித்ததில்லை.  ஈர நெற்றியில் திருநீற்றுப் பட்டை துலங்க, நெஞ்சு நிமிர்த்தி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். தொடர் கேள்விகளுக்கு அசராத தெளிவான எதிர்வினைகள், இலங்கை என்று சொல்லப்பட்ட போதெல்லாம், ஈழம்  என்ற கறாரான திருத்தல்கள்,   பொருத்தமான இடங்களில்  சைவத்திருமுறைகளின் கம்பீர முழக்கங்கள், போருக்கு எதிரானவன் என்பதை சொல்லுகையில்  குரலில் இருந்த அழுத்தம் என அந்த … Continue reading கடவுள் பிசாசு நிலம்

நன்னிலம்

கடந்த வாரம் திரு.அரங்கசாமி, ஏற்காட்டில் இருக்கும் ஒரு எஸ்டேட்டுக்கு சென்று வரும்படியும் அது தாவரவியலாளராக எனக்கு மகிழ்வளிக்கும் என்றும் சொன்னார். அவரும் அங்கு வரவிருப்பதாக சொன்னதாலும், எனக்கு இப்போது கல்லூரி விடுமுறைக்காலம் என்பதாலும் செல்ல நினைத்தேன், மேலும் அங்கு ஒரு எஸ்டேட்டில் கட்டுமான பொறியாளராக பணிபுரியும் நினேஷ் என்னும் நம் விஷ்ணுபுர குழும நண்பரொருவரும் என்னை அவர் பணிபுரியும் அந்த எஸ்டேட்டுக்கு வரசொல்லி சில ஆண்டுகளாகவே அழைத்துக்கொண்டிருந்தார். எனவே இரண்டையும் பார்த்துவிடலாம் என்று நினைத்து சனிக்கிழமை பயணப்பட்டேன். … Continue reading நன்னிலம்

அ.வெண்ணிலாவின் நீரதிகாரம்

கவிஞர் அ. வெண்ணிலா ஆனந்த விகடனில் முல்லைப் பெரியாறு  அணை கட்டுமானம் குறித்த  நீரதிகாரம் என்னும் தொடரை சென்ற வருடத்திலிருந்து எழுதி வருகிறார்..நீரதிகாரம் 100 வது அத்தியாயம் இந்த வாரம் வெளியானது. விகடன் இந்த நூறாவது வாரத்தை ஒரு சிறு விழாவாகவே கொண்டாடியது. முதல் அத்தியாயத்திலிருந்து தொடர்ந்து வாசித்து பின்னூட்டம் எழுதுபவள் என்னும் வகையில் எனக்கும் அவ்விழாவுக்கு அழைப்பு இருந்தது. வெண்ணிலா இதை எழுத துவங்குகையில்  அதிகபட்சமாக ஒரு 30 வாரங்கள் வரும் என நான் எதிர்பார்த்தேன். அணைக்கட்டுமானத்தை பேசுபொருளாக கொண்ட ஒரு தொடர் அதற்கு மேல் … Continue reading அ.வெண்ணிலாவின் நீரதிகாரம்