உலகின் மாபெரும் ஒற்றைத்தாவரம்!

உலகின் மிகப்பழமையான மரமான மெத்தூசலா  பைன்  மரம் (Pinus longaeva), உலகின் மிக பெரியதான அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கில் செக்கோயா தேசிய பூங்காவில் உள்ள சுமார் 2,500 க்யூபிக் மீ அளவு கொண்ட செக்கோயா மரம் (General Sherman), 115.92 மீ  உயரத்துடன் உலகின் மிக உயரமான மரம் என்னும் பெருமைக்குரிய ஹைப்பீரியான்  இவற்றுடன் உலகின் மாபெரும் ஒற்றைத்தாவரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலர்களை உருவாக்கும் கடல் தாவரங்கள் ’கடற்புற்கள்’ – seagrass எனப்படுகின்றன. நான்கு … Continue reading உலகின் மாபெரும் ஒற்றைத்தாவரம்!

பிதாவே!

ஆண்டவரே ! எனக்கு எதிர்தரப்பென்று ஒன்றிருப்பதில் ஆட்சேபணை ஏதும் இல்லை அவர்கள் கொஞ்சமும் வலுவற்றிருப்பதிலும் பிரச்சனையில்லை எனினும் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும் படியாகவாவது இருக்ககூடாதா பார்த்துச்செய்யுங்கள் பிதாவே!

புளிப்பும் இனிப்பும்,

 நாளை அகிலாவின் நிச்சயதார்த்தம்.(May 25.2023) கோவை செல்ல வேண்டி இருக்கிறது. நினைத்துக்கொண்டாற்போல டெய்லர் சங்கீதாவிடம் இருக்கும்  தைத்து முடித்த புதுப்புடவைகளில் ஒன்றை வாங்கிகொள்ளலாமென்று புறப்பட்டேன். செந்திலை இனி பொள்ளாச்சியிலிருந்து வரச்சொல்லி பின்னர் புறப்பட மாலை ஆகிவிடும் எனவே பேருந்திலேயே செல்ல நினைத்தேன். நல்ல உச்சிவெயிலில் புறப்பட்டு வேடசெந்தூர் பேருந்து நிறுத்தத்தில் 20 நிமிடம் நின்றேன்.பேருந்து வரும் அறிகுறியே இல்லை. என்னுடன் நிலா டைன் உணவகத்தில் பாத்திரம் தேய்க்கும் பணியிலிருக்கும் ஒரு பெண்மணியும் காத்திருந்தார், பின்னர் இருவருமாக பேசிக்கொண்டே … Continue reading புளிப்பும் இனிப்பும்,

சமர்ப்பணங்கள்

\ வாசிப்பிற்குள் நான் மிக இளமையிலேயே நுழைந்துவிட்டேன் என்றாலும் அப்போது அவை திருட்டுத்தனமான வாசிப்பென்பதால் அத்தனை மகிழ்ந்து வாசித்திருக்கவில்லை அப்பாவுக்கு பெண்கள் கதைப்புத்தகம் வாசிப்பதில் பெரும் ஆட்சேபணை இருந்தது, வாரப்பத்திரிகைகளுடன் என்னையோ அக்காவையோ பார்த்துவிட்டால் வீடு இரண்டுபடும். அவர் வீட்டில் இல்லாத சமயங்களில் அவசரமாக படிப்பதுண்டு. அப்போது பெரும்பாலும் காதல் கதைகள் தான் வந்துகொண்டிருந்தன என்பதும் காதல் திருமணத்தின் எல்லா பாதகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர் என்பதையும், இப்போது நினைக்கையில் அப்பாவின் அந்த மூர்க்கத்தை கொஞ்சமாகவேனும் புரிந்துகொள்ள முடிகின்றது … Continue reading சமர்ப்பணங்கள்

குருதி மரம்

JULY 11, 2023 / LOGAMADEVI  இந்தியப்பெருங்கடலில் ஆப்பிரிக்க கடற்கரைக்கு அடுத்து அமைந்திருக்கும் நான்கு தீவுகள் அடங்கியது  சொகோட்ரோ தீவுக்கூட்டம். இது 34 மில்லியன் வருடங்களுக்கு முன்பே அரேபிய நிலப்பரபிலிருந்து தனியே பிரிந்த நிலப்பரப்பு. யேமான் குடியரசின் பகுதியாகிய இங்குள்ள தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை. டிராகன் குருதி மரங்கள் என்பவை தாவர உலகின் அதிசயங்களில் ஒன்று.இத்தீவுக்கூட்டங்களில் ஒரு தீவில் மட்டுமே காணப்படும் இவற்றை நாம் விரைவில்   நிரந்தரமாக இழக்கவிருக்கிறோம்.  இம்மரங்கள் 1835ல்  … Continue reading குருதி மரம்

Pet poisons

வளர்ப்புப்பிராணிகள் நம் வாழ்வில்  மகிழ்ச்சியையும் தோழமையையும் நிறைவையும் தருகின்றன, ஆனால் அவற்றின் உரிமையாளர்களாக, அவற்றைப் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதும் மிக முக்கிய கடமையாகும். வளர்ப்பு பிராணிகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருட்கள் நம் வீட்டிலும் வீட்டுதோட்டத்திலும் நாம் பிரியம் என்னும் பேரில் அவற்றிற்கு அளிக்கும் உணவுபொருட்களிலும் இருக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன  நச்சுத்தன்மையுள்ள தாவரங்கள் அல்லது சில உணவுகள் என  செல்லப்பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது உயிருக்கே ஆபத்தான பல பொருட்கள் நம்மை சுற்றிலும் அநேகமாக அனைத்து வீடுகளிலும் … Continue reading Pet poisons

சென்னையில் விஜி!

(விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி தொண்டைமான் பூபதி காளிங்கராய சுப்ரமண்ய சுந்தரவடிவேல் தனது சென்னை விஜயம் குறித்தும் அகரனுடனான நட்பைகுறித்தும் எழுதிய (முதல் எழுத்துப்) பதிவு) எழுதுவதில் உள்ள சிக்கல் எழுதுவது அல்ல, துறை சார்ந்த வேலைகளும், நேரமின்மையும், நமக்கு எழுத்து முதிர்ச்சி இருக்குமா என்ற  ஐயப்பாடு இவையெல்லாம் தான். பிரதிபலன் பாரா பேரியற்கை எப்படி நமக்கு வேண்டுவனவற்றை வாரிவழங்கிக்கொண்டுள்ளதோ அப்படியே நம் சமூகமும். நாம் கவனிக்கவில்லையே, கிரகிக்கவில்லையே தவிர, வழங்குதல் என்றுமே வற்றுவதில்லை வரண்டுவிடுவதில்லை. எல்லோருக்கும் வாழ்வை … Continue reading சென்னையில் விஜி!

திருவண்ணாமலை!

சென்ற வாரம் முதன்முதலாக திருவண்ணாமலை சென்றிருந்தேன் ஒரு வேள்வியில் கலந்து கொள்ள.புதுச்சேரியும் திருவண்ணாமலையும் என் கனவுப்பயணங்களின் பட்டியலில் இருந்தவை. புதுச்சேரிச் கனவு முன்பு (2017 ல்) நனவானது.மறக்கமுடியாததுமானது. ஒரு சிறுகதை பட்டறை. கடற்கரை அருகில் இருந்த ஒரு தங்குமிடத்தில். கரும்பாறைகள் நிறைந்திருந்த , தூரத்தில் சிவப்பும் பச்சையுமாக விளக்குகள் ஒளிர மெல்ல  நகர்ந்து கொண்டிருந்த பெருங்கப்பல்களும், விளிம்புகளில் வெள்ளி பூசிக்கொண்டு துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த ஏராளமான சிற்றலைகளுமாக  அந்த கடற்கரை  அடிக்கடி கனவுகளில் வந்து கொண்டிருக்கிறது. மணக்குள விநாயகர் … Continue reading திருவண்ணாமலை!

மலர்த்துளி

May 22, 2023 சூரியகாந்தி போன்றவை  பொதுவாக மலர் என அழைக்கப்பட்டாலும் அவை உண்மையில் மஞ்சரிகள். பல நுண் மலர்கள்  தட்டுப்போல ஒன்றிணைந்து மத்தியில் அமைந்திருக்கும். அச்சிறு மலர்களை   மகரந்த சேர்க்கை செய்யவேண்டிய பூச்சிகள் அவற்றை கவனிக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காக  விளிம்புகளில்  பூச்சிகளை கவரும் பொருட்டு வண்ண மயமான ஓரிதழைக் கொண்ட சற்றே பெரிய மலர்கள் அமைந்திருக்கும். இத்தொகுப்பை மலர்த்தலை மஞ்சரிகள் என்போம் தாவரவியலில். இப்படி  பல  (florets) நுண்மலர்கள் கூட்டாக இணைந்திருக்கும் மலர்த்தலை மஞ்சரிகளை (head … Continue reading மலர்த்துளி