கதாநாயகி குறுநாவல்

அதிகாலை ஜெ தளத்தை திறந்ததும் கதாநாயகி 1 என்று கதைத்தலைப்பு  கண்ணில் பட்டதுமே அடைந்த நிம்மதியை எப்படிச்சொல்வதென்று தெரியவில்லை.  தொற்று குறித்த செய்திகள், வதந்திகள், மரணச்செய்திகள், ஊதிபெரிதாக்கப்பட்ட பொய்கள் என எத்தனை தள்ளியும் ஒதுங்கியும் இருந்தாலும் மேலேவந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது. முன்னனுபவம் இருப்பதால் அச்சமூட்டும் முழு ஊரடங்கு நாளையிலிருந்து, கதை இன்றிலிருந்து. உங்கள் கதைகளை இந்த அசாதாரண நாட்களில் வாசிப்பது உள்ளத்துக்கு பெரும் விடுதலையாக, சிகிச்சையாக இருக்கிறது.பலமணிநேர மின்தடைக்குப்பின்னர் மின் விசிறி ஓடத்துவங்குவதை போல ,அக்னி நட்சத்திரவெயிலில் முந்தாநாள் … Continue reading கதாநாயகி குறுநாவல்

அ.வெண்ணிலாவின் இந்திரநீலம்

அ. வெண்ணிலாவின் எட்டு சிறுகதைகளைக்கொண்ட ‘’இந்திர நீலம்’’ வாசித்தேன். கதைகளின் வடிவம்தான் சிறியது ,அவற்றின் பேசுபொருளோ ஆகப்பெரியது. பெண்களின் மனப்பக்கங்கள் பல்லாயிரம் கதைகளாக எழுதப்பட்டுவிட்டன பலரால், ஆனால் இந்திரநீலம் காட்டுவது பெண்ணின் பேசப்படாத அந்தரங்கப் பக்கங்களை. இதை பெண்ணெழுத்தாளரான வெண்ணிலா எழுதியது இன்னும் சிறப்பு. பாமா என்னும் சமகாலப்பெண், திரெளபதி, காரைக்காலம்மையான புனிதவதி,, கண்ணனின் கோபியர்கள், மாதவியின் மணிமேகலை, ஏசுவின் உடையை தொட்ட பாலியல் தொழில் செய்யும் பெண், கடவுளுக்கு தன்னை அளித்துவிட்ட நக்கன், கண்ணகி என … Continue reading அ.வெண்ணிலாவின் இந்திரநீலம்

இகபானா மலர்களின் வழி!

உலகின் அனைத்து கலாச்சாரங்களிலும் மலர்களின், மலர் வடிவங்களின் தாக்கம் இருக்கிறது. பண்டைய எகிப்திய ரோமானிய மற்றும் கிரேக்க  நாகரிகங்கள் அனைத்திலுமே  மலர்கள் அலங்காரத்திற்காகவும், வழிபாட்டிலும், தனிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களுக்காகவும், பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டன.   உலகெங்கிலும் இன்று மத எல்லைகளை கடந்த மலர்களின் பயன்பாடு இருக்கிறது. தெய்வங்களின் மலர் இருக்கைகள், கோவில்களின் கல்தூண்களின்  மலர்ச்செதுக்குகள், தென்னிந்திய கோலங்களின் மலர் வடிவங்கள், மலர்க்களங்கள்,  குகை ஓவியங்களின் மலர் வடிவங்கள் என பண்டைய நாகரிகங்களின் மலர்களின் பயன்பாட்டினை … Continue reading இகபானா மலர்களின் வழி!

மரபுக்கலையும் சினிமாவும்!

https://www.youtube.com/embed/IB8D88u6qUA?feature=oembed மரபுக்கலையும் சினிமாவும்  என் மாணவன் யானை சிவா அனுப்பித்தந்த ஒரு சிறிய கதகளி காணொளியை பார்த்ததை குறித்து ஜெவுக்கு எழுத இருந்தேன், எதிர்பாராமல் இன்று தளத்தில் ’’மரபுக்கலையும் சினிமாவும்’’ குறித்த பதிவில் கதகளி, கேரள சினிமா குறித்த பல முக்கியமான தகவல்களும் வந்ததில் கூடுதல் மகிழ்ச்சியாயிருந்தது., கதகளியைக்  குறித்து சமீபத்தில்தான் அறிந்துகொள்ள துவங்கி இருக்கிறேன். சிபிமலயில் படங்களாக தேடித் தேடி பார்த்துக்கொண்டிருந்த  பல்கலைகழக காலத்தில் வடவள்ளியில் ஒரு சிறு தியேட்டரில்  கமலதளம் பார்த்தேன். அதுதான் கதகளிக்கு … Continue reading மரபுக்கலையும் சினிமாவும்!

நஞ்சின் வரலாறு!

முகப்பு அறிமுகம் படைப்புகள் வெண்முரசு நேர்காணல்கள் ENGLISH தொடர்புக்கு வாசகர்கள்  கடிதம்  நஞ்சின் வரலாறு. கடிதம் நஞ்சின் வரலாறு. July 16, 2021 தாவர நஞ்சுகள் குறித்து ஒரு கட்டுரை எழுதுவதற்கு, நிறைய தேடித்தேடி வாசிக்கையில், கிடைக்கும் தகவல்களின் சுவாரஸ்யத்தில் கட்டுரை எழுதுவதை மறந்து வாசித்துக்கொண்டு மட்டும் இருக்கிறேன். நஞ்சூட்டிக் கொல்லுவது, நஞ்சுண்டு தற்கொலை செய்து கொள்வது, கத்தியின் ஒரு பக்கத்தில் மட்டும் நஞ்சை தடவி அதில் வெட்டப்பட்ட மாமிச உணவில் மருமகளை கொல்லுவது, செருப்பில் உள்ளாடையில், நீரில், உணவில், … Continue reading நஞ்சின் வரலாறு!

யூகலிப்டஸ்!

ஆஸ்திரேலியரான ஹாலண்ட்   பிரசவத்தில் மனைவி இறந்த பின் தாயை இழந்த தன் சிறு மகள் எலனுடன் தெற்கு வேல்ஸ் நகரில் ஒரு பெரும் பண்ணையை விலைக்கு வாங்கி குடிபெயர்ந்தார். ஹாலண்டின் இரு பெரும் சொத்துக்கள் அவரது பண்ணையின் நூற்றுக்கணக்கான யூகலிப்டஸ் மரங்களும் அவரின் பேரழகு மகள் எலனும் தான். பதின்ம  வயது எலனின் அழகு அந்த ஊர் இளைஞர்கள்  மத்தியில் பிரபலமாக இருந்தது. அவள் திருமண வயதை எட்டிய போது அந்த நாடே அவள் பேரழகை … Continue reading யூகலிப்டஸ்!

அளி!

உடையாள் July 18, 2021 உடையாள் வாங்க இந்த குழந்தைகளுக்கான அறிவியல் புனைகதையை முதன்மையாக என்னுடைய ஒரு அகவிடுதலைக்காகவே எழுதினேன். இது மொழியில் கற்பனையில் எனக்கு ஒரு புதிய வழியைக் காட்டியது. ஆனால் இவ்வாறு சில  கதைகளை எழுத வேண்டும் என்னும் எண்ணம் எனக்கு ஏற்படுவதற்கு நம் பள்ளிகள், கல்லூரிகளுடன் எனக்கிருக்கும் உறவாடலும் ஒரு காரணம். இங்கே பள்ளிகளில் பொதுவாக அறிவியல் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை, அறிவியல் தகவல்களே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. விளைவாக, தொழில்நுட்பமே அறிவியல் என கருதப்படுகிறது … Continue reading அளி!

ஆரம்பக் கல்விக்கு ஓர் இயக்கம்

’’ஆரம்பக்கல்விக்காக ஓர் இயக்கம் ’’குறித்த கேள்வியும், அதற்கு ஜெ தளத்தில் அளித்திருக்கும் பதிலும் மிக மிக முக்கியமானது. இக்கட்டுரை அரசின் கவனத்துக்கு போக வேண்டுமே என்று ஆதங்கமாக இருந்தது. சின்னஞ்சிறிய குழந்தைகளை கணினித்திரை முன்பு அமர வைத்து சொல்லிக்கொடுப்பதெல்லாமே முற்றிலும் வீண், கல்லூரி மாணவர்களுக்கே அப்படி கற்று தருவது தோல்வியடைந்திருக்கையில் ஆரம்பக்கல்வியை  ஒருபோதும் இப்படி கற்றுக்கொடுக்க முடியாது. ஆனால் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கும் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மிக இளம் வயதிலேயே ஆசிரியர்களை எப்படி … Continue reading ஆரம்பக் கல்விக்கு ஓர் இயக்கம்

காய்ச்சல் மரம் (சிங்கோனா)!

மமானியை தேடி பொலிவிய வனக்காவலர்கள் காட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தார்கள். அயலவர் ஒருவருக்கு மமானி உதவுவதை வெறுத்த இன்கா இனத்தின் இளைஞர்கள் அவனை காவலர்களுக்கு காட்டிக் கொடுத்திருந்தார்கள். அதை அறியாத மமானி தனக்குள்ளேயே பேசிக்கொண்டு காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தான். அவன் அதிர்ஷ்டத்தின் மீது அவனுக்கு சில வருடங்களாகவே அவநம்பிக்கை வந்துவிட்டது. மரப்பட்டைகளையும் விதைகளையும் சேகரிப்பது அவன் குலத்தொழிலாக 1 இருந்தும் இத்தனை வருடங்களாக அவன் எஜமானுக்கு தேவையான அந்த மரத்தை தேடிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு அம்மரத்தை நன்றாகவே அடையாளம் தெரியும். இலைகளின் அடிப்புறம் … Continue reading காய்ச்சல் மரம் (சிங்கோனா)!

குருதிப்பலி செந்தில்!

அகரமுதல்வனின் நேர்காணலில் செந்தில்குமார் குறித்த காணொளி பார்த்தேன். பெரும் மகிழ்வை தந்தது அவரின் பேச்சு. கனவில் இருப்பவரை போல மனதில் அவரின் வாசிப்பை மீள் மீள நிகழ்த்திக் கொண்டு பேசுகிறார், கள்ளமற்ற அவரின் கண்களின் பளிச்சிடல் காட்டுகிறது ஜெவின் மீதான அவரின் தூய அன்பையும் பெருமதிப்பையும். வாசிப்பில் அவரின் அகமொழி மேம்பட்டிருப்பது ’’சங்கறுத்து ரத்தம் கொடுப்பேனென்றல்ல , ’குருதிப்பலி’ என்பதில் தெரிகிறது.. தொடர் வாசிப்பில் நம்மை அறியாமலேயே அகம் கூர் கொண்டு விடும் என்று சில வாரங்களுக்கு … Continue reading குருதிப்பலி செந்தில்!